1. Jerusalem – יְרוּשָׁלַיִם
ஷாலேமின் பாரம்பரியம் அல்லது சமாதானத்தின் பாரம்பரியம்
யோசுவா 10:1ல் ‘எருசலேம்’ என்று பைபிளில் முதன் முறையாக பயன்படுத்தப்படும் பெயர், இது யூதர்களாலும் மேற்கத்திய உலகிலும் விரும்பப்படும் பெயர். அரபி மொழியில் ursalim / أْوْرْسَـالِـم / உர்ஷலிம் என்று அழைக்கப்படும். எபிரேய மொழியில் சரியான உச்சரிப்பு ‘எரூஷாலயிம்’ ஆகும்.
2. Shalem – שלם
முழுமையான, பாதுகாப்பான, அமைதியான, சரியான, அமைதியுடன் என்று பொருள்படும். ஆதியாகமம் புத்தகத்தில், ஷாலெம் என்பது ஆபிரகாமின் காலத்தில் நகரத்தின் பெயர். இது மெல்கிசெடெக்கால் ஆளப்படுகிறது. ‘ஷாலெம்’ எருசலேமின் குறுகிய பெயராகவும் கருதப்படுகிறது.
3. Moriah – מוֹרִיָּה
கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்று பொருள்படும்.
ஆதியாகமம் புத்தகத்தில், மோரீயா என்பது மலையின் பெயர். இதுவே யூத மற்றும் கிறிஸ்தவ மரபுகளில், ஆபிரகாம் தனது மகன் ஐசக்கை உயிர்பலி செய்ய வந்த இடம். அக்காலத்தில் இது மக்கள் வசிக்காத பகுதியாக இருந்தது.
4. Jebus – יְבוּס எவூஸ்
கீழே தள்ளப்பட்டது என்று பொருள்படும்.
பழைய ஏற்பாட்டில், டேவிட் மன்னர் காலத்தில் கோவில் மலையில் (Temple Mount) உள்ள கானானிய படை அரணின் பெயர் எவூஸ். அரண் கட்டப்பட்ட கோவில் மலையில் உள்ள பெரிய கதிரடிக்கும் தளத்தை இந்த பெயர் குறிக்கிறது. டேவிட் எவூஸ் அரணை வெற்றி கொள்கிறார். எருசலேமை அதன் இடத்தில் புதிய இஸ்ரேலிய தலைநகராக நிறுவினார். கோவிலின் தலமாக இந்த கதிரடிக்கும் தளத்தை டேவிட் வாங்கினார்.
5. Zion – צִיּוֹן உயரம்
சீயோன் அல்லது சியோன் என்பது கோயில் மலை (Temple Mount) மற்றும் அதன் சரிவுகளைச் சுற்றியுள்ள நகரத்தின் பாரம்பரிய பெயர்.
6. Ariel – אֲרִיאֵל கடவுளின் சிங்கம்
அரீயேல் என்பது எருசலேமின் ஒரு கவிதை பெயர். இருப்பினும், நவீன காலங்களில், இந்த பெயர் பெரும்பாலும் எருசலேமிலிருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள யூதேயா மற்றும் சமாரியாவின் அரீயேல் நகரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது
7. City of David – Ir David / עִיר דָּוִד / ஈய்ர் டாவிட்
நகரத்தின் நிறுவனர் டேவிட் மன்னரிடமிருந்து பெறப்பட்ட பெயர்.
8. Adonai Yireh – יְהוָה יִרְאֶה / அடோனை இய்ரெ
“இறைவன் பார்க்கிறான்”.
ஆபிரகாம் கொடுத்த பெயர். கடவுள் ஐசக்கிற்குப் பதிலாக பலியிட ஆட்டை வழங்கிய பிறகு. இது வழக்கமாக “அடோனை இய்ரெ” என்று உச்சரிக்கப்படுகிறது. ரபினிக் வர்ணனையாளர்கள் சிலரின் கருத்தில் ‘ஷாலெமுடன் இய்ரே’வின் கலவையாகும் எருசலேம் என்ற பெயர்.
9. Ir HaKodesh – עִיר הקוֹדֶשׁ / ஈய்ர் ஹகோடெஷ்
புனித இடத்தின் நகரம் என்று பொருள்படும். நகரத்தின் மிகவும் பொதுவான அரபி பெயர், அல்-குட்ஸ், இந்த பெயரின் நேரடி மொழிபெயர்ப்பு ஆகும்.
10. Betulah – בְּתוּלָה / பெத்தூலா
கன்னி (புலம்பல் 1:16)
11. Drushah – דְּרוּשָׁה / தெரூஷா
பலரால் விரும்பப்படுவது (Is 62:12)
Leave A Comment
You must be logged in to post a comment.