Jesus – Name translations நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் பெயர் பல்வேறு மொழிகளில் எப்படி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.

Jesusησοῦς (Iesous) இன் ஆங்கில வடிவம், இது יֵשׁוּעַ (இ‌‌‌‌‌‌‌யேஷூஅ) அராமைக் பெயரின் கிரேக்க வடிவமாக இருந்தது. இ‌‌‌‌‌‌‌யேஷூஅ என்பது இயெஹோஷுஅவின் சுருக்க வடிவமாகும் (Hebrew form of Joshua யோசுவாவைப் பார்க்கவும்יְהוֹשֻׁעַ). இயேசு கிறிஸ்து என்று நன்கு அறியப்பட்ட இ‌‌‌‌‌‌‌யேஷூஅ பென் யோசேஃப் புதிய ஏற்பாட்டின் மைய நபராகவும் கிறிஸ்தவ மதத்தின் மூலமாகவும் உள்ளார். மேசியாவின் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றிய அவர் கடவுள் மற்றும் கன்னி மரியாளின் மகன் என்று நான்கு நற்செய்திகளும் கூறுகின்றன.

வேதாகம மூல மொழிகளில்* ஒன்றான அராமைக்கில், Aramaic word ישוע Yeshua – இ‌‌‌‌‌‌‌யேஷூஅ என்று அழைக்கப்படுகிறது. இது ஆண்டவர் இயேசு கிறிஸ்து வாழ்ந்த முதல் நூற்றாண்டில் வழக்கில் இருந்த Aramaic / אַרָמָיָא / அராமாயா மொழி வடிவம் ஆகும்.

ישועYeshua/இ‌‌‌‌‌‌‌யேஷூஅ – SALVATION/இரட்சிப்பு என்று பொருள்.

நாம் தமிழில் “இயேசு” என்று அழைப்பது ஜெர்மானிய மொழிபெயர்ப்பு.

பிற மொழிகளில் ஆண்டவரின் பெயர் …

Early Aramaic word  ܝܫܘܥ  – Isho

Greek word Ἰησοῦς – Iēsous.

Latin word Iēsus (pronounced Yay soos)

Arabic word عيسى (pronounced eesa)

German word Jesu (pronounced Yay soo)

Tamil word இயேசு from German!

Malayalam word യേശു (Yeshu)

Telugu word తెలుగు (Yesu)

Kannada word ಯೇಸು (Yesu)

Hindi word यीशु (Yishu)

Bengali word যীশু

Marathi word येशू – Yeshu

Gujarathi word ઇસુ

Punjabi word ਯਿਸੂ

Russian word Иисус (Yehsoos)

Chinese word 耶稣 (pronounced Yee soo)

Thai word เยซู (Yesu)

Corsican word Ghjesu

Georgian word იესო

Irish word Íosa

Japanese word イエス

Korean word 예수

Jesus – Name translations மேலும் உள்ள உலக மொழிகளில் ஆண்டவரின் பெயர் எவ்வாறு உள்ளது என்பதை தெரியப்படுத்தவும். 

ஆண்டவர் இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் தன்னைச் சுற்றியுள்ள கலாச்சாரங்களின் மூன்று பொதுவான மொழிகளை அறிந்திருந்தார்: அராமைக், எபிரேயம் மற்றும் கிரேக்கம். ஆகையால் அவர் மக்களிடம் தொடர்பு கொள்ள இந்த மூன்று மொழிகளையும் பயன்படுத்தியிருப்பார் என்பதே விவிலிய அறிஞர்களின் முடிவு.


*அராமைக் மொழியில் எழுதப்பட்ட வேதாகமத்தின் பகுதிகள் எஸ்றா 4:8-6:18 மற்றும் 7:12-26 (67 வசனங்கள்), தானியேல் 2:4b-7:28 (200 வசனங்கள்), எரேமியா 10:11 மற்றும் பல்வேறு பெயர்கள் மற்றும் ஒற்றை வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் முழுவதும் சிதறிக்கிடக்கிறது.